பொறுப்புள்ள கூட்டாண்மைப்பிரஜை என்றவகையில், ஸ்ரீலங்கா ரெலிகொம் சமூக அபிவிருத்திக்கு மிகவும் முக்கியம் கொடுத்துள்ளது. தேசிய தொலைத்தொடர்பாடல் சேவை வழங்குனர் என்ற வகையில், எமது கொள்கைகளை வரையறுக்கும்போதும் வலையமைப்பு உட்கட்டமைப்பை விரிவாக்கும்போதும் நாடுமுழுவதுமான டிஜிட்டல் அறிவை மேம்படுத்துவதில் கூடுதல் கவனம் செலுத்துகிறோம். அகலப்பட்டை மற்றும் ததொதொ வாங்கும்திறனுடன் கிடைக்கக்கூடியதாகவும் இருப்பதை உறுதிப்படுத்தி, இலத்திரனியல் இடைவெளியை இட்டு நிரப்புவதற்காகத் தொடர்ந்தும் முயற்சிசெய்கிறோம்.
எதிர்காலத்துக்குத் தயாரான சந்ததியை உருவாக்குவதில் நாம் பேரார்வத்துடன் இருப்பதுடன், ததொதொ மூலமாக பெண்களின் மத்தியில் அதன் முக்கியத்துவத்தை எடுத்துச்சொல்லி, பாலினப்பேதத்தை இல்லாமல் செய்து, நாட்டின் அபிவிருத்திக்கு வலுவூட்டுகிறோம். சரியான தொழில்நுட்பத்தினை சரியான நேரத்தில், சரியான இடத்தில் அறிமுகப்படுத்தி, கல்வி, சுகாதாரம் மற்றும் பொழுதுபோக்குத்துறைகளையும் தொழில்நுட்பவல்லுனர்களையும் இலத்திரனியல் வாழ்க்கைமுறைக்கு ஊக்கப்படுத்தி, அவர்களின் வாழ்க்கைமுறையை முழுதாக மாற்றுவதற்கு முயல்கிறோம். நாம் எமது மைய வணிகத்திற்கப்பாற்பட்டு, தனிப்பட்டவர்களும் நிறுவனங்களும் தொழில்ரீதியான அங்கங்களும் மற்றும் பாடசாலைகள், வைத்தியசாலைகள், விளையாட்டுகள் போன்றவற்றுக்கு வலுவூட்டுகிறோம். இதற்குதாரணமாக, இடர் வரும் காலங்களில் மனிதநேயப்பணிகளைச் செய்தல், வறியோருக்கும் அங்கவீனர்களுக்கும் உதவுதல் போன்றவற்றைக்குறிப்பிடலாம். எமது இதயம் சமூகத்திற்கும் அதிலுள்ள மக்களிடமே உள்ளது என்பதால், அவர்களில் தினசரி வாழ்வில் பங்கெடுத்து, அதை எம்மால் முடிந்தவரைக்கும் மாற்றுவதற்காகவே நாம் இந்த நடவடிக்கைகளில் ஈடுபடுகிறோம்.
இலங்கையின் இயற்கை வளம் மற்றும் கலாச்சாரப் பாரம்பரியத்தை நீண்டகாலம் கட்டிக்காக்கவும் அதனால் எதிர்கால சந்ததியின் நன்மைக்காகவும், ஸ்ரீலங்கா ரெலிகொம் ‘எதிர்காலத்திற்காக பாரம்பரியத்தைக் கட்டிக்காப்பதற்கு’ தன்னை அர்ப்பணித்துள்ளது. ஸ்ரீலரெ 2018 நாட்காட்டியானது ‘Connected Lifestyles of Sri Lanka ’ என்ற கருத்தம்சத்தின்கீழ் உருவாக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், பொதுமக்கள் மத்தியில் காட்டுப் பழங்களின் முக்கியத்துவம் மற்றும் பயன்பாடுகள் பற்றிய விழிப்புணர்வினை ஏற்படுத்தி, எதிர்கால சந்ததியினர்க்காக அவற்றைப் பேணுவதை ஊக்கப்படுத்துவதை ஸ்ரீலரெ நோக்கமாகக்கொண்டுள்ளது.
2020 : Narration of Art
2019 : Splendors of Water
2018 : Connected Lifestyles of Sri Lanka
2017 : Traditional Rice of Sri Lanka.
2016 : Wild Fruits of Sri Lanka.
2015 : Corals of Sri Lanka.
ஸ்ரீலரெ இன் கடந்தகால நாட்காட்டிகள் இலங்கையின் மருத்துவ செடிகள், இலங்கையில் அருகிவரும் பறவைகள், ஓர்கிட் மலர்கள், நன்னீர்வாழ் மீன்கள், இலங்கையில் முகமூடிகள் போன்ற பலவகைக் கருத்தம்சங்களின் கீழ் உருவாக்கப்பட்டன. 2009 ஆம் ஆண்டின் நாட்காட்டி, இலங்கையில் அருகிவரும் வண்ணத்துப்பூச்சிகள் பற்றிக் கவனம் செலுத்தியது. கவலையீனத்தாலும் கிருமிநாசினிகளின் பாவனையாலும் உலக அளவில் வண்ணத்துப்பூச்சிகள் அருகி வருவதால், இன்னும் அருகிவரும் நிலைக்குப் போகாவிட்டாலும் இலங்கையின் வண்ணத்துப்பூச்சிகளைப் பாதுகாக்கவேண்டியது பற்றிய விழிப்புணர்வும் அவற்றின் அழகினை இரசிக்கும் மனப்பாங்கும் ஏற்படுத்தப்பட்டது.
ஸ்ரீலங்கா ரெலிகொம் தொடர்ந்தும் நாடெங்கிலுமுள்ள பல்வேறு கல்வி நிறுவனங்கள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்களுக்கான உள்ளக பயிற்சிகளை தனது அதி நவீன வசதிகளைக்கொண்ட ஸ்ரீலரெ இடங்களில் நடாத்திவருகின்றது. இந்த பயிற்சி செயற்றிட்டங்கள், மாணவர்கள் தற்போதுள்ள அதிநவீன தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தும் வாய்ப்புக்களுடனான செய்முறைப்பயிற்சிகளை உள்ளடக்கியுள்ளன. நாம் பொறியியல், தகவல்தொழில்நுட்பம், சந்தைப்படுத்தல், மனிதவளங்கள், நிதியியல் போன்ற பல துறைகளில் பயிற்சிகளை வழங்குகிறோம்.
இலவசப்புத்தகங்கள் வழங்கும் செயற்றிட்டம் 2004 இல் ஆசியா ஃபௌண்டேஷனின் பங்களிப்புடன் ஆரம்பிக்கப்பட்டது. 2013 இலும் பல புத்தகவழங்கல் நிகழ்வுகள் இடம்பெற்றன. தகவல், கல்வி மற்றும் ஆங்கிலமொழிப்புலமையை மாணவர்கள், ஆசிரியர்களிடையே மேம்படுத்துவதற்காக முக்கியமான சமூக முதலீடு இது. ‘அறிவுச்செல்வத்தைப் பரப்புதல்’ என்ற கருத்தம்சத்தின் அடிப்படையில், 100,000 இற்கும் மேற்பட்ட புத்தகங்கள் மற்றும் கல்வி சம்பந்தமான உபகரணங்கள் நாடெங்கிலுமுள்ள பாடசாலைகள், கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள் போன்றவைகளுக்கு வழங்கப்பட்டன.
நாட்டின் தொழில் திறமைகளை அதிகரிக்கவும் 2013 இல் நேரடியான சர்வதேச முதலீடுகளைக் கவர்வதற்குமென, பல உயர்மட்டத்திலான கூட்டங்கள் மற்றும் கண்காட்சிகளை நடத்தி நாட்டின் தொழில்நுட்ப மற்றும் ததொதொ செயலாற்றல்களை வெளிக்காட்டும் அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு ஸ்ரீலரெ பலமாக ஆதரவளித்தது.
இன்ஃபொடெல் 2007-2017
டெக்னோ 2017
தயத கிருல 2014
CHOGM
FutureGov SAARC
தேசிய சட்ட மாநாடு 2013 – இலங்கை சட்டத்தரணிகள் சங்கம்
26ஆவது வருடாந்த மாநாடு மற்றும் அபெக்ஸ் விருதுகள்
தேசிய பொறியியலாளர் மாநாடு – IESL
இன்ஃபொர்டெல் போன்ற கண்காட்சிகள் மூலம் தொழில்நுட்பம் மற்றும் அதன் செயலாற்றல்கள் பற்றிய விழிப்புணர்வு
2013, டெக்னோ.
Colombo Night Races.
தேசிய ஒலிம்பிக் குழு – ஒலிம்பிக் தின ஓட்டம், தேசிய ஒலிம்பிக் அக்கடமி அமர்வுகள்.
Gunner Supercross.
இலங்கை அரசாங்க சேவை விளையாட்டுப் போட்டி
CIM வருடாந்த நிகழ்வுகள்
CIMA வணிகத்தலைவர்கள்
மாநாடு
CNCI Achievers’ விருதுகள்
தேசிய மனிதவள மாநாடு
இலங்கை தேசிய நூற்பட்டியல் 50ஆவது ஆண்டுவிழா – தேசிய நூலகம் மற்றும் ஆவணப்படுத்தல் சேவைகள் சபை
உலக தபால் தினம் – தபால் திணைக்களம்
இலங்கையின் பிரதிபலிப்புகள் – தொழிற்றுறை மற்றும் வர்த்தக அமைச்சு
Archives