நாம் எமது ஊழியர்கள் அனைவருக்கும் எல்லாக்கட்டங்களிலும் பயிற்சிகள் பெறும் வாய்ப்புகளை வழங்குகிறோம். இது, கம்பனியின் ஒருவர் பணியாற்ற ஆரம்பிக்கும்போது தனிப்பட்ட அறிமுகப்பயிற்சியும், பின்னர் அவ்வப்போது தமது திறங்களை வளர்த்துக்கொள்வதற்கேற்ற பொருத்தமான பயிற்சி செயற்றிட்டங்களையும் வழங்குகிறோம். இதில் ஸ்ரீலரெ பயிற்சி நிலையங்கள் மூலமாக வழங்கப்படும் உள்ளக பயிற்சிகள் உட்பட, வெளிநாடுகளில் வழங்கப்படும் வெளிப்புற பயிற்சிகளும் அடங்கும். ஊழியர்களின் கல்வித்தகைமைகளுக்கேற்ப, ஸ்ரீலரெயில் அவர்களின் தொழில் வளர்ச்சிக்கான சந்தர்ப்பங்களை ஒவ்வொரு கட்டங்களிலும் நாம் வழங்குகிறோம். சகல ஊழியர்களதும் செயற்பாடுகள் நுணுக்கமாக கண்காணிக்கப்பட்டு, தொடர்ந்து முன்னேறுவதற்காக ஊக்கத்தொகைகளையும் வழங்குகிறோம்.