Submitted by isuru on செவ், 01/11/2022 - 11:55 அகலப்பட்டை (அல்லது Broadband) என்பது, இணையத்தை இணைக்கும் ஒரு முறையாகும். அகலப்பட்டை (அல்லது Broadband) என அழைக்கப்படும் இது, முன்னர் பொதுவாக Narrowband என அழைக்கப்பட்ட பழைய இணைப்புகளுடன் ஒப்பிடும்போது, ஒரு அதிவேக இணைய இணைப்பாகும். ADSL என்பது, செப்புக்கம்பியுடனான தொலைபேசி வலையமைப்பினைப் பயன்படுத்தும் ஒரு அகலப்பட்டை இணைப்புத் தொழில்நுட்பமாகும். ADSL ஆனது, ஒரு தொலைபேசி இணைப்பில் பலவகையான அலைவரிசைகளைப் பயன்படுத்தி, உங்கள் சாதாரணமான 56k மொடெம் வழங்கும் வேகத்தைவிட அதிவேகமான செயற்பாட்டை வழங்கும். (10 இலிருந்து 140 மடங்குகள் வேகமானது). நீங்கள் இணையத்தையும் தொலைபேசியையும் ஒரே நேரத்தில் பயன்படுத்தலாம். ஸ்ரீலரெ அகலப்பட்டை ஏற்றுக்கொள்ளத்தக்க விலையில் அதிவேக, தடையற்ற இணையத்தை வழங்குகிறது. Title ஸ்ரீலரெ அகலப்பட்டை (ADSL) என்பது என்ன? Category UserGuide