Light
Dark
Pay your bill

அகலப்பட்டை வேகத்தைப் பாதிக்கக்கூடிய காரணிகள் யாவை?

Submitted by isuru on செவ், 01/11/2022 - 11:52

பின்வரும் காரணிகளைப் பொறுத்து, நீங்கள் அனுபவத்தில் பெறும் வேகத்தின் உண்மையான தன்மைகள் குறிப்பிடத்தக்க அளவில் மாறக்கூடும்:

  • உங்கள் சேவையில் இயக்கப்படுவது 'Line Profile' ஆகும். இணைப்பின் ஸ்திரத்தன்மையைப் பேணுவதற்காக, ஸ்ரீலரெ அகலப்பட்டைச் சேவைகளை உச்ச தரவிறக்க வேகங்களைக் கட்டுப்படுத்தும் பழைமையான ஆரம்ப பொதியின் தன்மைக்குள் வைத்துள்ளது. அதற்குப்பின்னர் ஸ்ரீலரெயின் தொழிற்பாடுகள் மற்றும் பராமரிப்புக் குழுவானது, தனிப்பட்ட பாவனையாளர்களின் சூழ்நிலைக்கேற்ற இணைப்பு ஸ்திரத்தன்மைக்கும் வேகத்திற்கும் இடையிலான சாதகபாதகங்களை ஆராய்ந்து, வாடிக்கையாளர்களின் பின்னூட்டங்களின் அடிப்படையில் உகந்த வேகத்திற்கு மாற்றும்.
  • ஸ்ரீலரெ பரிவர்த்தனையிலிருந்து உங்கள் வதிவிடத்திற்கான செப்புக்கம்பியின் நீளம்.
  • ஒரே கேபிளின் செப்புச்சோடி இணைப்பிலிருந்து பிற வாடிக்கையாளர் பாவிக்கும் பிற மின்னணுவியல் சேவைகளின் தன்மை மற்றும் அவற்றின் எண்ணிக்கைகள்.
  • உங்கள் இடத்துக்கும் பரிவர்த்தனைக்கும் இடையிலான செப்பு வயரின் இணைப்புத்தரமும் அமைவடிவாக்கமும்.
  • வெளிப்புற மூலங்களிலிருந்தான மின்சாரத் தடங்கல்கள் (மின்சார மோட்டர்கள்).
  • உங்கள் வதிவிட செப்புக்கம்பியிடலின் அமைவடிவாக்கம்
  • உங்கள் கணிணியின் மென்பொருள் அமைவடிவாக்கமும் செயல்நிரலும் (குறிப்பாக, அது எவ்விதம் மேலிணைப்பை பரிவர்த்தனையில் பயன்படுத்துகிறது)
  • உங்கள் ADSL மொடெம் அல்லது ரௌட்டரின் செயலாற்றல்கள்.
  • நீங்கள் அணுகும் கணிணியின் கொள்ளளவு, சுமையேற்றம், சேருமிடத்திற்கான தரவுப் பெறுவழி வீதம்.

    எனவே, மேற்சொன்ன காரணிகள், கணக்கீட்டு மதிப்பிலிருந்து உங்கள் இணையவேகத்தைக் குறைக்கும் என்பது உண்மை. விளம்பரப்படுத்தப்பட்ட அலைவரிசை அளவை அறிந்துகொள்வதற்குப் பின்வரும் சார்விதிகள் பயனுள்ளதாக இருக்கக்கூடும்.

    • Bandwidth (அலைவரிசை அளவு)

    அனுப்பும் தரவுகளின் உச்ச எண்ணிக்கையைத் தீர்மானிக்கும் எந்தவொரு அகலப்பட்டை இணைப்பினதும் கொள்ளளவே அலைவரிசை அளவு ஆகும்.

    சில சமயங்களில் பல தொழில்நுட்ப காரணங்களால் பொதிகளில் விளம்பரப்படுத்தப்பட்டது போல சந்தாதாரர்கள் உச்ச அலைவரிசை அளவினைப் பெறுவது கடினம். அப்படியான சூழ்நிலையில் ஒரு தொழில்நுட்ப மதிப்பீடு செய்தபின், வாடிக்கையாளர்களுக்கு முடிந்தவரையில் உச்ச அலைவரிசை அளவு வழங்கப்படும். ஆனபோதிலும், உச்ச அலைவரிசை அளவானது, ‘குறைந்த அலைவரிசை அளவு’ என குறிப்பிடப்படும், அனுமதிக்கப்பட்ட குறைந்தளவு அலைவரிசையை விட அதிகமானால், அந்தக்குறிப்பிட்ட பொதியானது வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படமாட்டாது. அதற்குப்பதிலாக, வாடிக்கையாளரின் இணைப்பின் தன்மைக்கு ஏதுவான இன்னொரு பொருத்தமான பொதி வழங்கப்படும்.

    • Maximum & Minimum Bandwidth Parameters (உச்ச, குறைந்த அலைவரிசை அளவு சார்விதிகள்)
Title
அகலப்பட்டை வேகத்தைப் பாதிக்கக்கூடிய காரணிகள் யாவை?
Category