Training center section

all you want

ஸ்ரீலங்கா ரெலிகொம்மின் பிராந்திய பயிற்சி நிலையங்களில் ஒன்றான காலி பயிற்சி நிலையமானது, 1985 இல், காலி வீதியில், ருஹுண பல்கலைக்கழகத்திற்கு அருகாமையில், உணவத்துணவில் அமைந்துள்ளது. தென்மாகாண மாணவர்களை மனதில்கொண்டு கட்டப்பட்ட காலி பயிற்சி நிலையத்திற்கு பேருவளையிலிருந்தும் மாத்தறையிலிருந்தும் சுலபமாகச் செல்லலாம்.

காலி பயிற்சி நிலையம் இரு மாடிக்கட்டிடத்தைக்கொண்டது. இங்கே ஒரு கணிணி ஆய்வுகூடம், மூன்று வகுப்பறைகள், C&G வகுப்பறை மற்றும் நிர்வாக அலுவலகம் போன்றவை இருக்கின்றன. வெளிப்புற உற்பத்தி பயிற்சி நிலைய நுழைவழியில் செயன்முறைப்பயிற்சி அனுபவத்தைப்பெறலாம். விடுதி வசதிகளும் இங்குண்டு.

இக்கட்டிடமும் அதிலுள்ள வசதிகளும் கற்பதற்குரிய சுறுசுறுப்பான, நவீன சூழலுடன் திட்டமிட்டு உருவாக்கப்பட்டவை. இங்குள்ள பெரும்பாலான ஆய்வுகூடங்களும் வகுப்பறைகளும் குளிரூட்டப்பட்டவை.

 
 
Scroll To Top