Site Map

தனிப்பட்டவை

You are here

Why Metro Ethernet Service

all you want

வணிகநிறுவனங்கள் தமது தொடர்பாடல் நோக்கங்களுக்காக தமது தொழிற்பாட்டு மற்றும் முதலீட்டு செலவைத் தொடர்ந்து சாதகமாகப் பயன்படுத்தவேண்டிய தேவையுள்ளது.

வணிகமுயற்சி சூழலில் பரந்துள்ள புதிய வணிக செயலிகள், வணிக செயற்பாடுகளை இயக்கும் பிரதான அம்சங்களாகும். இதனால் வணிகத்தின் போட்டித்தன்மையும் செயற்றிறனும் அதிகரிக்கும்.

ஒருமுகப்படுத்தப்பட்டதொரு சூழலில் கம்பனி உள்ளக குரல்வழி, தரவு மற்றும் காணொளி நெரிசல் யாவும் ஒரு தனித்த பக்கெட் அடிப்படையிலான வணிகமுயற்சி வலையமைப்பில் ஒன்றாக்கப்படும்.

இது வெற்றியடையவேண்டுமெனில், ஒருமுகப்படுத்தப்பட்ட வலையமைப்பானது பரவலாக்கப்பட்ட்தொரு கூட்டாண்மைச் சூழலில் இந்த செயலிகளைப் பயன்படுத்தி வேலைப்படையின் தொடர்பாடல் தேவைகளை ஆதரிக்கவேண்டும். புதியதும் மாறிவருவதுமான கேள்விகளை திருப்திப்படுத்துவதற்காக, தெரிவுசெய்யபட்ட வலையமைப்பு ஒருங்கிணைப்பினை ஆதரிப்பதற்கு அலைவரிசை அளவு அதிகரிப்பினை ஆதரிக்கவேண்டும். இது பின்வருவனவற்றால் உந்தப்படுகிறது:

  • விநியோகிக்கப்பட்ட செயலிகள்
  • பல்லூடக மற்றும் அலைவரிசை அளவு செறிவான வணிக செயலிகள்
  • வலையமைப்புகளின் ஒன்றிணைப்பு
  • வணிக தொடர்ச்சி மற்றும் இடர் மீட்சி சேவைகள்
  • களஞ்சிய தீர்வு

இந்தச் சூழலில், வணிக நிறுவனங்களில் பயன்படுத்தப்படும் செயலிகளை தடங்கலின்றி செயற்படுத்துவதற்காக மெட்றோ ஈதர்நெட் பலவிதமான சேவைகளை வழங்குகிறது. மேலும் வணிக நிறுவனத்தின் பல்வேறு இடங்களுக்கான இணைப்புகைத் தேவைகளை நிறைவேற்றுவதற்காக, 10 Gbps வரையிலான உயர் பெறுவழி வீதங்களை ஆதரிப்பதற்குத் தேவையான உயர் அலைவரிசை அளவுத்தேவைகளை நிறைவேற்றுகிறது.

ஸ்ரீலரெ மெட்றோ ஈதர்நெட்டின் அனுகூலங்கள்
  • செலவுப்பயனுறுதி

    உயர் அலைவரிசை அளவு இணைப்புகைத் தேவைகளுக்கு மெட்றோ ஈதர்நெட் இணைப்புகை சிக்கனமானதும் கவர்ச்சியானதுமாகும். குறைந்த விலையில் ஒரு அலைவரிசை அளவுக் கூறு எந்த மட்டத்திலுமுள்ள பாவனையாளர்களுக்கும் நிச்சயமாக செலவுப்பயனுறுதியைக்கொடுக்கும். நெகிழ்வுத்தன்மையுள்ள அலைவரிசை அளவுகள் பாவனையாளர்கள் குறிப்பிட்ட அலைவரிசை அளவுத் தேவைகளுக்காகவெனவே உள்ள இணைப்புக் கொள்ளளவினை பெறுவதற்கு வகைசெய்யும்.

  • உயர் நம்பிக்கைத்தன்மை

    எமது வலையமைப்பு நிர்வாக மையம் மூலமாகக் கண்காணிக்கப்பட்டு உங்களுக்கு 24x7 இணைப்புகை வழங்கப்படுகிறது. இந்த வளையத்தை அடிப்படையாகக்கொண்ட வலையமைப்பு, முக்கியமான உங்கள் வணிகச் செயலிகளின் உயர்ந்த நம்பிக்கைத்தன்மைக்குத் தேவையான உட்கட்டுமானத்தை வழங்குகிறது.

  • விரிவாக்கத்திறன்கொண்ட சேவைத்தெரிவுகள்

    பிற வலையமைப்பு பெறுவழித்தெரிவுகளுடன் ஒப்பிடும்போது இதில் வர்த்தகரீதியில் கவர்ச்சிகரமான அலைவரிசை அளவுக்கட்டமைப்புகள் உள்ளன. அலைவரிசை அளவுச் சேவைகள் 2 Mbps இருந்து 10 Gbps வரையிலுள்ளன.

  • நெகிழ்வுத்தன்மை

    point-to-point இலிருந்து full-meshed multipoint layer 2 (Ethernet) சேவைகள் வரையிலான பலவித இணைப்புகைத் தெரிவுகளுடன் layer 3 பெறுவழி சேவைகளும் கிடைக்கக்கூடியதாகவுள்ளன. உ+ம்: IP VPN கள் மற்றும் இணையம்.

  • எளிமை

    மெட்றோ ஈதர்நெட் ஊடாக உங்கள் வலையமைப்பாக்கங்கள் எளிமைப்படுத்தப்பட்டுள்ளன. ஈதர்நெட் ஆனது, பரவலாகக்கிடைக்கக்கூடியதும் நன்றாக அறிந்துகொள்ளப்பட்டதுமான தொழில்நுட்பமாகும். LAN மற்றும் WAN இலுள்ள ஈதர்நெட், வழிப்படுத்தல் செயற்பாடுகளைத் திட்டமிடுவதற்கும் கட்டுப்படுத்துவதற்கும் வழிவகுத்து, வலையமைப்பு நிர்வாகத்தை எளிமைப்படுத்துகிறது.

  • அதிசிறப்பான சேவை மட்டங்கள்

    உங்கள் செயலிகள் தடையின்றி இயங்குவதை உறுதிப்படுத்தும் ஆரம்பம் முதல் முடிவு வரையான சேவை மட்டங்கள் .

 

மெட்றோ ஈதர்நெட் அம்சங்கள்
  • உயர் அலைவரிசைஅளவு கொள்ளளவு

    மெட்றோ ஈதர்நெட் நெகிழ்வுத்தன்மையுள்ள அலைவரிசைஅளவுப்படிகளுடன் கூடிய சிறந்த அலைவரிசைஅளவுத் தேவைகளை நிவர்த்திசெய்வதற்காக வடிவமைக்கப்பட்டது. விருப்பத்தெரிவான ஈதர்நெட், பரவலாகப் பயன்படுத்தப்படும் தரவுப்போக்குவரத்து தொழில்நுட்பமாகும்.

  • சேவைத்தரம்

    பல்வேறு சேவைப்பிரிவுகள் உங்கள் தேவைகளைப்பொறுத்து குரல்வழி, காணொளி, முக்கிய வணிகத்தரவு, சிறப்புத்திறன் தரவு போன்றவற்றை, அவற்றின் முக்கியத்துக்கேற்ப வரிசைப்படுத்தும். அலைவரிசை அளவுகளை முக்கியத்துக்கேற்ப வரிசைப்படுத்தாதபோது, முக்கியத்துவமற்ற நெரிசலானது, பாவிக்கப்படாத அலைவரிசை அளவுக்குள் பாய்ந்து, சந்தா செலுத்தப்பட்ட அலைவரிசை அளவினை சாதகமாகப் பயன்படுத்துவதற்கு அனுமதிக்கப்படும்.

  • வேகமான அலைவரிசை அளவு நவீனப்படுத்தல்

    மெட்றோ ஈதர்நெட் குறிப்பிட்ட செயலிகளுக்காக வடிவமைக்கப்பட்ட உங்கள் அலைவரிசை அளவுத் தேவைகளை வழங்கும் செயலாற்றல் கொண்டது. சேவை வழங்கல் வன்பொருள் உபகரணத்தில் மாற்றங்கள் இல்லாததால் நவீனப்படுத்தல் விரைவானதும் செலவுப்பயனுறுதி கொண்டவையுமாகும்.

  • ஒரு இணைப்பு, பல சேவைகள்

    உங்கள் வணிகம் பலமான இணைப்புகை சேவைகளை ஏற்கக்கூடியது. அவை சேவைகளை வினைத்திறனுடன் நிர்வகிப்பதற்காக தரவு, குரல்வழி, காணொளி போன்றவற்றை ஒரு தனியானதும் நம்பிக்கையானதுமான இணைப்பில் செயல்முறைப்படுத்தும்.

  • கிடைக்கும் தன்மை மற்றும் விரிவாற்றல்

    மெட்றோ ஈதர்நெட் வலையமைப்பானது ஒரு பாதுகாக்கப்பட்ட இழைய வளைய கட்டமைப்பிலும் இழைய பல்வகைமையுள்ள பாதுகாக்கப்பட்ட உபகரணத்திலும் இயங்குகிறது. நிகழ்நேர செயலிகளுக்கு carrier class நம்பிக்கைத்தன்மையை MPLS இன் வேக மீள்வழிப்படுத்தி செயலாற்றல்கள் உறுதிப்படுத்துகின்றது.

  • பாதுகாப்பான இணைப்புகை

    MPLS இன் இயற்கையான பாதுகாப்பு அம்சங்கள், உங்கள் தரவுகளின் இரகசியத்தன்மையைப் பேணும் என்பது உறுதி. வணிகமுயற்சி செயலிகள் பாதுகாப்பான முறையில் நிறுவப்பட ஈதர்நெட் வழிவகுக்கிறது.

 

 
 
Scroll To Top