எமது அடுத்த தலைமுறை வலையமைப்பினால் (Next Generation Network (NGN) முடுக்கிவிடப்படுவதன் மூலம், எமது வலையமைப்புச் சேவைகள் அதிநவீன தொழில்நுட்பங்களானG.SHDSL, Metro/Carrier Ethernet and IP-MPLS போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டு பலவிதமான நன்மைகளை உங்களுக்கு வழங்குகிறது.
IP VPN
Metro Ethernet
Business Internet Line
தரவுகளின் இரகசியத்தன்மையை உறுதிப்படுத்துவதற்காக, தொழில்நுட்ப ஆதாரங்களான IP/MPLS (Multi-Protocol Label Switching போன்றவற்றைப் பயன்படுத்தி, ஒரு பங்கிட்ட உட்கட்டமைப்பின் மூலமாக வழங்கப்படும் தனிப்பட்ட வலையமைப்பு சேவைகளே IP VPN- Virtual Private Network ஆகும். எமது IP VPN மூலமாக நாம் வணிகமுயற்சி தரமான விரிவாக்கத்தன்மை, நம்பிக்கைத்தன்மையுடனான பல IP அடிப்படையாகக் கொண்ட உட்கட்டுமானங்களை உங்களுக்கு வழங்குகிறோம். அத்துடன் தனிப்பட்ட சூழ்நிலைகளில் காணப்படும் செயற்பாடு மற்றும் பாதுகாப்பு தனித்தன்மைகளையும் வழங்குகிறோம்.
நன்றாக வடிவமைக்கப்பட்ட ஒரு IP VPN பின்வருவனவற்றை வழங்குவதன் மூலம் ஒரு கம்பனிக்கு பெரும் நன்மையைக்கொடுக்கும்:
தனிப்பட்ட குறும்பரப்பு வலையமைப்பில் (LAN), IP ஐ அடிப்படையாகக் கொண்ட உள்ளக இணையங்கள் கம்பனிகள் தமது வணிகங்களை நடத்தும் வழிகளை அடிப்படையில் மாற்றியுள்ளன.......
MPLS தொழில்நுட்பத்தை அடிப்படையாகக்கொண்ட VPN கள் private IP routing இன் திறனை label switching இன் மேலதிக செயற்பாட்டுடன் சேர்த்து, வலையமைப்பின் எந்த இடங்களுக்கிடையேயும் packet களை நகர்த்தும். உங்கள் ஒவ்வொரு
இடங்களிலிருந்தும் MPLS "cloud" க்கு ஒரு பெறுவழி இணைப்பு மட்டுமே உள்ள நிலையில் full mesh இணைப்புகையானது உங்கள் வலையமைப்பு விரிவாக்கத்திறன், நம்பிக்கைத்தன்மை மற்றும் உள்ளக வலையமைப்பு செயலியின் செயற்பாடு போன்றவற்றை மேம்படுத்தும்.
எமது MPLS IP ஆதாரத்தை விட, ஒவ்வொரு VPN உம் ஒரு தனித்த வலையமைப்பு உட்கட்டமைப்பு என்பதால், உங்கள் குரல்வழி மற்றும் பிற வணிக நெரிசல்களுக்கு எமது MPLS உம் அதிகமான பாதுகாப்பினை வழங்கும்.
SLT IP VPN ஆனது, உங்கள் வலையமைப்பில் சேய்மைப் பெறுவழி மற்றும் இணைய தரவு நிலையத்தில் தொகுதிவழங்கல் போன்ற விருப்பத்தெரிவுகளை இணைக்கும் நெகிழ்வுத்தன்மையுடனான சிறந்த VPN தொழில்நுட்பங்கள், பெறுவழி, பாதுகாப்பு மற்றும் குரல்வழி போன்ற தெரிவுகளை வழங்குகிறது.
இது நாடெங்கிலுமுள்ள வணிக அலுவலகங்களுக்கான IP VPN சேவையாகும். இது SLT IP/MPLS மைய வலையமைப்பு மூலம் இணைக்கப்படுகிறது. இப்பிரிவின்கீழ் ஸ்ரீலரெ பின்வரும் உற்பத்திகளை வழங்குகிறது.
SLT Global VPN உங்கள் சர்வதேச அலுவலகங்களை பாதுகாப்பான தனிப்பட்ட வலையமைப்பின் மூலம் இணைக்கிறது.
SLT இன் enterprise IP VPN மூலம் வணிகமுயற்சி வாடிக்கையாளர்கள் இணையத்தினூடாக செல்லவேண்டிய தேவையின்றி ஒரு 3G/4G மொடெம் மூலம் நேரடியாக செல்லின பெறுவழி வலையமைப்பினை அணுகலாம். அதிகாரம்பெற்ற ஒருவர், பாவனையாளர் பெயர் மற்றும் பாதுகாப்பான கடவுச்சொல்லை உறுதிப்படுத்திய பின்னர் தமது enterprise IP VPN ஐ அணுகலாம். இது வாடிக்கையாளர் தமது enterprise IP VPN உடன் எல்லா நேரமும் இணைந்திருக்கும் அதே நேரம் இடப்பெயர்வாற்றலையும் வழங்குகிறது.
remote offices, telecommuters and mobile users இணையம் மூலமாக தமது enterprise IP VPN ஐ அணுகுவதற்காக SLT remote VPN வழங்குகிறது. இது பாவனையாளர்கள் தமது IP VPN ஐ எந்த பெறுவழியையும் பயன்படுத்தி வீட்டிலிருக்கும்போதோ அல்லது வெளிநாடுகளுக்குச் செல்லும்போதோ இணையம் மூலம் அணுகலாம்.
SLT Remote VPN இன் சாதகங்கள்
SLT's IP VPN சேவையானது சிறந்த வலையமைப்பு மூலவளத்தைப் பயன்படுத்தி தனிப்பட்ட விண்ணப்பங்களின் தேவைகளுக்கான செயற்பாட்டினை உறுதிப்படுத்தி CoS செயலாற்றலை வழங்குகிறது. மைய வலையமைப்பில் மூன்று CoS கிடைக்கின்றன. customer edge routers இலுள்ள மூன்றில் ஒவ்வொன்றிலும் வாடிக்கையாளரின் சொந்த CoS மட்டங்களைத் திட்டமிடலாம்.