Site Map

தனிப்பட்டவை

Business

You are here

தரவு

all you want

சர்வதேச தரவு உற்பத்திப்பொருட்கள்

ஸ்ரீலரெ உலகளாவிய அளவில் ஒன்றிணைக்கப்பட்ட வணிகங்களுக்கும் தொலைத்தொடர்பாடல் சேவை வழங்குனர்களுக்கும் அதிநவீன தொழில்நுட்பங்களைப்பயன்படுத்தி பலவிதமான புதுமை உருவாக்க தரவு தீர்வுகளை வழங்குகிறது. எமது உலகளாவிய இணைப்புகையானது SE-ME-WE 3, SE-ME-WE 4, DS (Dhiragu-SLT), BL (Bharat-Lanka) cable systems, globally dispersed POP போன்ற எமது கடலடிக்கேபிள் கொள்ளளவுகளால் இணைக்கப்படுகிறது. அத்துடன், Tier 1 சர்வதேச தொலைத்தொடர்பு இயக்குனர்களுடனான பலமான பங்குடமையானது வாடிக்கையாளர்களின் தேவைகளை சிக்கல்களின்றி நிறைவேற்றுவதை உறுதிப்படுத்துகிறது.

Global IPLC

IIPLC (International Private Leased Circuit) என்பது சர்வதேச வணிகங்கள் மற்றும் தொலைத்தொடர்பு இணைப்பாளர்களுக்காக, இணைய பெறுவழி, வணிக தரவுப்பரிமாற்றம், காணொளி உரையாடல் மற்றும் எந்தவொரு தொலைத்தொடர்பாடலுக்கெனவும் வழங்கப்பட்ட ஒரு தனிப்பயனுள்ள point-to-point இணைப்பாகும். எமது கடலடிக் கேபிள்கள், செய்மதி அல்லது நிலத்தில் செப்பு அல்லது இழைய கேபிள்கள் மூலம் உலகின் எந்தவொரு இடத்துக்கும் இணைப்புகையை வழங்க ஸ்ரீலரெ தயாராகவுள்ளது.

Toll Free Service

ஸ்ரீலரெவின் Toll Free சேவை மூலம், கட்டணமின்றி பிற நாடுகளிலிருந்து ஒரு தொலைபேசி எண்ணை டயல் செய்ய முடியும். இதற்கான கட்டணம் அழைப்பை ஏற்பவரிடம் வசூலிக்கப்படும்.

Global IP Transit

சர்வதேச இணைய சேவை வழங்குனர்களுக்காக (ISP) ஸ்ரீலரெ பல்வேறு IP Port வேகங்களையும் விறுவிறுப்பான வர்த்தகங்களையும் வழங்குகிறது.

Global VPN

சர்வதேச இணைப்புகை வழங்கும் பங்காளர் வலையமைப்புகளுடன் ஒன்றுடன் ஒன்று இணத்து MPLS அடிப்படையாகக்கொண்ட IPVPN தீர்வுகளை ஸ்ரீலரெ வழங்குகிறது. இதன்மூலம் நிறுவனங்கள் உலகளாவிய வலையமைப்புகளின் தனிப்பட்ட தொடர்பாடல்களைப் பெறலாம். இது, குரல்வழி, தரவு மற்றும் காணொளிகளை நம்பிக்கையானதும் கிடைக்கக்கூடியதுமான IP WAN மூலம் வழங்கி வணிகத்தொடர்பாடலுக்கு பாதுகாப்பை வழங்குகிறது.

Global Capacity Lease Services

சர்வதேச தொடர்பு இணைப்பாளர்களுக்கான தேவைகளை நிறைவேற்றுவதற்காக ஸ்ரீலரெ கடலடி கேபிள் கொள்ளளவுகளை வழங்குகிறது.

Scroll To Top