Light
Dark
Pay your bill
all you want

ஸ்ரீலங்கா ரெலிகொம்மின் நாடு முழுவதுமுள்ள அலுவலகங்களில் சகல இனத்தையும் சார்ந்த 6000 இற்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரிகிறார்கள். நாட்டிம் முன்னணி தொலைத்தொடர்பாடல் கம்பனியாக நாம் இன்று இருப்பதற்கு காரணம் எமது ஊழியர்களே என்பதால் நாம் அவர்களை எமது மிகமுக்கியமான சொத்தாக கருதுகிறோம். அதனால், எமது ஊழியர்களின் பங்களிப்புகள் மெச்சப்படுகின்றன என்பதை உறுதிசெய்வதற்காக நாம் பல சிறந்த ஊழியர் அனுபவங்களை அவர்களுக்கு வழங்குகிறோம். இவற்றில், ஊழியர்கள் தமது கடமைகளைத் தன்னம்பிக்கையுடன் திறம்படச் செய்வதற்காக வழங்கப்படும் பயிற்சி மற்றும் அபிவிருத்தி, தொடர்பாடல் மற்றும் தொழில் அபிவிருத்தி வாய்ப்புகள் பற்றியதிலான வெளிப்படையான அணுகுமுறை போன்றன உள்ளடக்கப்பட்டுள்ளன. அத்துடன் அவர்களின் நலன் கருதி பலவகையான நன்மைகள் மற்றும் சிறப்புரிமைகளையும் போன்றவற்றையும் நாம் வழங்குகின்றோம். இந்த முயற்சிகள் மூலம் நாம், ஒரே குடும்பமாக இணைந்து எமது இலக்குகளை அடைவதற்கான ஊக்கமுள்ள, திருப்தியுள்ள ஒரு வேலைப்படையைப் பேணுகிறோம். அத்துடன் எல்லோருக்கும் சம உரிமை என்ற தாத்பரியத்தில் நாம் எமது பணிச்சூழலை சகல இனங்களைக்கொண்டதாகவும் பாகுபாடுகளற்றதாகவும் வைத்திருக்கிறோம். 2009 இல் ஆரம்பிக்கப்பட்ட எமது கம்பனியின் முழுமாற்றமானது, 2011 இல் ‘ஒரே தேசம், ஒரே குரல்’ என்ற விளம்பரச்சின்ன அடையாளத்துடன் இன்னும் தொடர்கிறது.

இது ஏற்கனவே தொழிற்பாட்டிலுள்ள பலமான மனிதவளப்பயிற்சிகளைக்கட்டியெழுப்பி, எமது திறனுள்ள ஊழியர் படையானது கூட்டாண்மைச் செயல்நோக்கங்களைத் தொடர்ந்தும் சுறுசுறுப்புடன் பின்பற்றுவதை உறுதிசெய்யும். உயர்நிலைசார் அதிகாரிகளுக்கு செயற்பாடுடன் தொடர்புடைய ஊதியம், வருடாந்த செயற்பாட்டு மீள்பார்வை, ஒழுக்கக்கோவைகள், சர்வதேச சிறப்பு பயிற்சிகள் மற்றும் தொழில்சங்கங்கள் மூலமான பொதுக்கூட்டுப்பேரம் ஆகிய எல்லாம் ஸ்ரீலரெயின் பெருமைக்குரிய கூட்டாண்மைக்கலாச்சாரத்தில் செறிந்துள்ளன.

சிறந்த பயிற்சிகளை ஊக்கப்படுத்தல் – ஸ்ரீலரெ ஊழியர் கொள்கை

நீண்டகாலம் நிலைத்துநிற்கும் சமூக மாற்றத்தை வழங்குவதற்கான வலுவூட்டப்பட்ட ஒரு ஊழியர்படையைப் பயிற்றுவிப்பதென்பது, ஸ்ரீலரெ ஊழியர்படை முகாமைத்திட்டத்திற்கு கடுஞ்சிக்கலைக்கொடுப்பதாகும். Shop and Office Employee Act, the Wages Boards Ordinance மற்றும் இலங்கையின் சகல பொருத்தமான தொழிலாளர் சட்டங்களுக்கும் இணைவாக, ஸ்ரீலரெயின் நடைமுறைகளும் பயிற்சிகளும் ஊழியர்படை முகாமைத்துவக் கையேட்டினால் வழிகாட்டப்படுகின்றன. எல்லா ஊழியர்களும் எல்லா நேரமும் சிறந்த கொள்கைகள் மற்றும் நடுவுநிலையான நடைமுறைகள் பின்பற்றுவதின் முக்கியத்துவம் வலியுறுத்தப்படுவதுடன், எல்லோருக்கும் சமஉரிமை வழங்குவதற்கான சகல முயற்சிகளையும் இந்தக்கம்பனி எடுக்கிறது.

மனக்குறைகளைக் கையாளும் நடைமுறைகளும் ஊழியர் உறவுமுறையும்.

ஸ்ரீலரெயின் ஊழியர் மனக்குறைகளைக்கையாளுதல் மற்றும் ஆலோசனை நடைமுறைகள், தொழில் சம்பந்தப்பட்ட மற்றும் தனிப்பட்ட விடயங்களில் தீர்வுகளை வழங்கும் அதேநேரம், ஊழியர்களிடம் உரிமை உணர்வையும் தொடர்பாடல்சார் பணிக்காலாச்சாரத்தையும் கட்டியெழுப்புகின்றன.

ஊழியர் உறவுகளை ஊக்கப்படுத்தும் பிற முயற்சிகள்:

  • தொழில் சங்கங்களுடனான கூட்டங்கள். மாதாந்தம் குறைந்தது இரண்டு கலந்துரையாடல்கள்

  • முகாமைத்துவத்துடன் சுமுகமான உறவுகளைப்பேணுவதால் இருதரப்பினருக்கும் ஏற்படக்கூடிய நன்மைகளைக் கருத்தில்கொண்டு, தொழில்சங்கத்தினர் மற்றும் உறுப்பினர்கள் வெளிப்புற விழிப்புணர்வு செயற்றிட்டங்களை நடத்தல்.

  • தொழிலாளர் திணைக்களம், இலங்கை ஊழியர் சங்கம் போன்றவற்றுடன் நெருங்கிய தொடர்புகளைப் பேணுதல்.

  • தொழிலாளர் சங்க நிகழ்வுகளை, கல்வி மற்றும் பொழுதுபோக்குச் செயற்றிட்டங்களை ஏற்பாடுசெய்தல்.

  • தொழில்சங்கங்களுடன் இணைந்து பல்வேறு சமய நிகழ்வுகளை ஒழுங்குசெய்தல்

ஊழியர் சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு

ஊழியர்களின் சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு ஸ்ரீலரெக்கு மிகவும் முக்கியமானதாகும். அதன்படி, ஸ்ரீலரெ ஊழியர்கள் மட்டுமன்றி, இக்கம்பனியின் கட்டிடங்களில் பணிபுரியும் வெளிப்புறமூல ஒப்பந்தகாரர்களினதும் பாதுகாப்பை உறுதிப்படுத்தவேண்டியுள்ளது. கடமைபுரியும் இடத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது தவிர, ஸ்ரீலரெ, ஊழியர் மத்தியின் தனிப்பட்ட சுகாதாரம் பற்றிய விழிப்புணர்வு பிரசாரத்தையும் ஆரம்பித்துள்ளது. வேலைக்கும் வாழ்க்கைக்குமிடையிலான சமனிலையை உருவாக்கும் அதேநேரம், ஊழியர்களை சுகாதாரமான வாழ்க்கைமுறைக்கு ஊக்குவித்தலானது, முழு சமூகத்துக்குமே நிலையான சமூகப்பயிற்சிகளை ஏற்படுத்தும்.