Site Map

தனிப்பட்டவை

எம்மைப்பற்றி

all you want

எமது கலாச்சாரமும் சுற்றாடலும்
  • வேலைத்தளத்தினுள் ஒரு ‘குடும்பம்’ என்ற கருத்தம்சத்தை நாம் உண்மையாகவே நம்புகிறோம். கம்பனியின் இலக்குகளை மட்டுமல்லாமல் தனிப்பட்ட தொழில் ஆர்வங்களையும் நிறைவேற்றுவதற்காக, எமது ஊழியர்கள் அனைவரும் உரிமைத்தன்மை, விசுவாசம் மற்றும் ஒரே ‘குடும்பம்’ என்ற மனப்பாங்கை வளர்த்து ஒன்றிணைந்து பணிபுரிகிறோம்.
  • எமது பயணத்தில் எமது ஊழியர்களை பெறுமதிமிக்க பங்காளர்களாக இணைத்துக்கொள்ளும் நாம், அவர்களுக்குப் பலவகையான நன்மைகளையும் முன்னுரிமைகளையும் வழங்கி, அவர்களின் நலத்தை உறுதிப்படுத்துகிறோம்.
  • எமது பணிச்சூழலானது அமைதியான, நவீனமான, சுற்றுப்புறச்சூழலுடன் ஒத்துப்போவதாகவுள்ளதுடன், சகல ஊழியர்களுக்கும் மூலவளங்கள் மற்றும் நவீன தொழில்நுட்பங்களையும் வழங்குகிறோம். அத்துடன் ஸ்ரீலரெ பணிச்சூழலானது, இத்துறையின் மாறிவரும் நடப்புகளுக்கேற்ப தொடர்ந்து மாற்றமடைந்து வருகிறது.
  • ஸ்ரீலரெ இல் பணிச்சூழலானது பாரபட்சமோ வேறுபாடுகளோ அற்றதாக இருப்பதை நாம் உறுதிப்படுத்துவதுடன், எமது திறமையான மனக்குறைகளை கையாளும் நடைமுறைகள் மற்றும் கொள்கைகள் மூலம் அவர்களுக்கான ஆதரவையும் வழங்குகிறோம்.
தொழில் முன்னேற்றமும் தனிப்பட்ட வளர்ச்சியும்

நாம் எமது ஊழியர்கள் அனைவருக்கும் எல்லாக்கட்டங்களிலும் பயிற்சிகள் பெறும் வாய்ப்புகளை வழங்குகிறோம். இது, கம்பனியின் ஒருவர் பணியாற்ற ஆரம்பிக்கும்போது தனிப்பட்ட அறிமுகப்பயிற்சியும், பின்னர் அவ்வப்போது தமது திறங்களை வளர்த்துக்கொள்வதற்கேற்ற பொருத்தமான பயிற்சி செயற்றிட்டங்களையும் வழங்குகிறோம். இதில் ஸ்ரீலரெ பயிற்சி நிலையங்கள் மூலமாக வழங்கப்படும் உள்ளக பயிற்சிகள் உட்பட, வெளிநாடுகளில் வழங்கப்படும் வெளிப்புற பயிற்சிகளும் அடங்கும். ஊழியர்களின் கல்வித்தகைமைகளுக்கேற்ப, ஸ்ரீலரெயில் அவர்களின் தொழில் வளர்ச்சிக்கான சந்தர்ப்பங்களை ஒவ்வொரு கட்டங்களிலும் நாம் வழங்குகிறோம். சகல ஊழியர்களதும் செயற்பாடுகள் நுணுக்கமாக கண்காணிக்கப்பட்டு, தொடர்ந்து முன்னேறுவதற்காக ஊக்கத்தொகைகளையும் வழங்குகிறோம்.

எமது ஊழியர்களுக்கான நன்மைகளும் முன்னுரிமைகளும்
  • நிதியுதவிகள்
    எமது ஊழியர்களுக்கு நாம் கடன்கள், கொடுப்பனவுகள் போன்ற பணம் சம்பந்தப்பட்ட உதவிகளை வழங்குவதுடன், அவர்களது உயர் படிப்புக்காகவும் நிதியுதவித்திட்டங்களை அமைத்துள்ளோம்.
  • சுகாதாரமும் பாதுகாப்பும்
    ஸ்ரீலரெவின் வருடாந்த ‘சுவத’ செயற்றிட்டத்தின் கீழ் ஊழியர்களுக்கு ஒழுங்கான உடற்பரிசோதனைகள் உட்பட, பல மருத்துவ உதவிகளை வழங்குகிறோம். ஸ்ரீலரெ தலைமை அலுவலகத்தில் 2012 ஒரு மருத்துவ நிலையமும் திறந்துவைக்கப்பட்டு, வேலைத்தளத்தில் நேரக்கூடிய விபத்துக்கள், வியாதிகளுக்கு சிகிச்சையளிக்கப்படுகிறது.
  • பிறதுறைச்செயற்பாடுகளை ஊக்குவித்தல்
    விளையாட்டு, கலாச்சாரம் மற்றும் சமயம் சம்பந்தப்பட்ட விழாக்களில் பங்கேற்றல், வருடாந்த சுற்றுலா, ‘டோஸ்ட் மாஸ்டர்’ போன்றவற்றை நாம் ஊழியர்களிடையே ஊக்குவிக்கிறோம். அத்துடன் ஊழியர்களிடையே இருக்கக்கூடிய சிறப்புத்திறங்களை தேசிய மற்றும் சர்வதேச மட்டங்களில் வெளிக்கொணர்கிறோம்.

Scroll To Top