Site Map

தனிப்பட்டவை

எம்மைப்பற்றி

You are here

சிறப்புக்குறிப்பு

all you want

நாம் யார் - எமது பூகோள, பிரிவு சார்ந்த, சந்தைச் செயலாற்றல்கள்

இலங்கையின் பெறுமதிமிக்க பெறுமானவலுக்கம்பனியான ஸ்ரீலங்கா ரெலிகொம் பி.எல்.சியானது, 2015 டிசம்பர் 31 இல் ரூ. 84 பில்லியனை சந்தை மூலதனவாக்கத்தைக்கொண்டு, நாட்டின் முன்னணி அகலப்பட்டை மற்றும் ஆதார உட்கட்டுமான சேவைகள் வழங்குனராகவுள்ளது. கடந்த வருட முடிவில் இக்கம்பனியின் இருபெரும் பிரதான பங்குதாரரான இலங்கை அரசாங்கம், திறைசேரியின் செயலாளர் மூலமாக 49.5 % பங்குகளையும் நெதர்லாந்தின் குராகோவிலுள்ள குளோபல் கொம்யூனிகேஷன்ஸ் ஹோல்டிங் என்.வி மூலமாக 44.98% பங்குகளையும் கொண்டுள்ளன. எஞ்சிய பங்குகள் பொதுமக்களுக்கு விற்கப்பட்டுள்ளன. இக்கம்பனியானது தேசிய நீண்டகால உள்நாட்டு நாணய மற்றும் வெளிநாட்டு நாணயத்தரமிடல் பற்றியதில் ‘Fitch’ தரமிடலினால் AAA(lka) தரத்தைப்பெற்றும், Standard & Poor’s இனால் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நாணய கடனிறுக்கும் ஆற்றல் தரமிடல் பற்றியதில் B+ ஆகவும் தரமிடப்பட்டுள்ளது.

ஸ்ரீலரெ குழுமமானது; குரல்வழி, தரவு, அகலப்பட்டை, மொத்தவிற்பனை, வணிகமுயற்சி, தொலைக்காட்சி மற்றும் செல்லின சேவைகள் போன்ற பிரிவுகளில் பல்தேசிய கூட்டாண்மை நிறுவனங்கள், பெரிய மற்றும் சிறிய கூட்டாண்மை நிறுவனங்கள், பொதுத்துறை, வியாபார மற்றும் வதிவிட வாடிக்கையாளர்கள் உட்பட, அறுபது இலட்சத்திற்கும் மேலான வாடிக்கையாளர் தளத்தைக்கொண்டுள்ளது.

ஸ்ரீலங்கா ரெலிகொம் குழுமத்தின் பிரதான திட்டக்குறிக்கோள்களில் ஒன்று, அடுத்த தலைமுறை வலையமைப்பு, தேசிய ஆதார வலையமைப்பு, ADSL2+, VDSL2, Optical fibre, Carrier-grade Wi-Fi, நிலையான மற்றும் செல்லின 4G LTE தொழில்நுட்பங்கள் போன்ற அடுத்த தலைமுறைப்பெறுவழிகள் மூலமாக அகலப்பட்டை அடிச்சுவட்டை விரிவாக்குவதாகும். இக்குழுமத்தின் மொத்த ஒருங்கிணைந்த தீர்வுப்பட்டியலில் குரல்வழி, வலையமைப்பு, தரவு வழங்கல், நிர்வகித்த சேவைகள், கணிணி முகில் சேவைகள் வணிகமுயற்சித்தீர்வுகள் போன்றனவும் அதன் உரிமையாக்கப்பட்ட துணை நிறுவனமான மொபிடெல்லின் செல்லின அடிப்படையில் 2.5G/3.5G/4G LTE வலையமைப்புகள் போன்றனவும் அடங்குகின்றன.

SEA-ME-WE 5, SEA-ME-WE 4, SEA-ME-WE 3, Bharat-Lanka submarine cable system, Dhiraagu-SLT submarine cable system போன்ற பல சர்வதேச கடலடிக்கேபிள் முறைமைகள் மூலமாக வழங்கப்படும் அதிநவீன சேவைகள் மூலமாக, தாம் இப்பிராந்தியத்தின் பிரதான முன்னெடுப்பாளராக வரவேண்டுமென்பதே ஸ்ரீலரெவின் குறிக்கோளாகும்.

முன்னணி வியாபார நிறுவனங்கள், சிறிய மற்றும் நடுத்தர வணிகமுயற்சிகளால் சிறந்ததும் மிகுந்த நம்பிக்கைக்குரியதுமான தகவல்தொடர்புத்தொழில்நுட்ப வழங்குனராக ஸ்ரீலரெ, இனங்காணப்பட்டுள்ளது. அதுமட்டுமன்றி, நாட்டின் பிற தொலைத்தொடர்பாடல் இயக்குனர்களால் சிறந்த மொத்தவிற்பனை மற்றும் வலையமைப்பு வழங்குதலுக்கான பொறுப்புகள் இக் கம்பனியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. ஸ்ரீலரெவின் நுண்ணறிவுத்தீர்வுகள்; உள்நாட்டு வியாபாரங்கள், சிறிய மற்றும் நடுத்தர வணிகங்கள் உலக அரங்கில் போட்டியிடுவதற்கேற்ப, அடுத்த தலைமுறை குரல்வழி, வலையமைப்பு, தரவு வழங்கல் மற்றும் நிர்வகித்த சேவைகள் போன்ற அனைத்து தேவையான சேவைகளையும் அடக்கியுள்ளன.

உலகளாவிய அளவில் குரல்வழி, தரவு மற்றும் காணொளி வலையமைப்புகளின் ஒன்றிணைப்பானது வணிகங்கள் இயங்கும் விதத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. பலமான ஒருங்கிணைக்கப்பட்ட செயலாற்றல்கள், விஸ்தரிக்கப்பட்ட நம்பிக்கைத்தன்மை, மேம்படுத்தப்பட்ட விரிவாக்கத்திறன், நெகிழ்வுத்தன்மை மற்றும் செலவுப்பயனுறுதியுடனான நடைமுறைப்படுத்தல் போன்றவை எமது உற்பத்திப்பட்டியலுக்குத் தனிச்சிறப்பளிக்கும் ஒப்பற்ற சிறப்பம்சங்களாகும். ஸ்ரீலரெவின் விரிவான சேவைவழங்கல் தீர்வுகள்; வணிகங்களுக்கு அதன் தொழிற்றிறமையுடன் கூடிய முக்கிய தொடர்பாடல் உட்கட்டமைப்பினை வழங்கி தம்மீதான அவற்றின் நம்பிக்கைக்கு உத்தரவாதமளிக்கின்றன.

ஸ்ரீலங்கா ரெலிகொம் குழுமமானது, தனது பெறுமதிமிக்க வாடிக்கையாளர்களுக்கு நிலையான மற்றும் செல்லின தொலைபேசித்தொடர்பு, அகலப்பட்டை, தரவு, ஐபிடிவி, கணிணிமுகில் சேவை, தொகுதிச்சேவைகள், வலையமைப்புத்தீர்வுகள் போன்ற அனைத்துப்பிரிவுகளையும் உள்ளடக்கிய ததொதொ தீர்வுகளை, தனது நவீன தொழில் நுட்பங்கள் மூலமாகவும் பல்வகைச்சேவைகள் மூலமாகவும் வழங்குகிறது. ஸ்ரீலரெ குழுமத்தின் கீழ் தொழிற்படும் துணைக்கம்பனிகளாவன: மொபிடெல் பிரைவேட் லிமிடெட் (செல்லின சேவைகள் வழங்குனர்), விஷன்கொம் பிரைவேட் லிமிடெட் (ஐபிடிவி சேவைகள்), எஸ்.எல்.டி பப்ளிகேஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் (விபரக்கொத்து வெளியீட்டு சேவைகள்), ஸ்கை நெட்வேர்க் பிரைவேட் லிமிடெட் (வயர்லெஸ் அகலப்பட்டை சேவைகள்), ஸ்ரீலங்கா டெலிகொம் சேர்விஸஸ் லிமிடெட் (கூட்டாண்மை மற்றும் சிறிய வணிக வாடிக்கையாளர்களுக்கான மொத்த வலையமைப்பு தீர்வுகளை வழங்குகிறது), எஸ்.எல்.டி ஹ்யூமன் கபிடல் சொலூஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் (மனிதவளங்களை வழங்குகிறது), எஸ்.எல்.டி புரொபர்ட்டி மனேஜ்மென்ட் பிரைவேட் லிமிடெட் (குழுமத்தின் சொத்துக்களை சிறந்த வகையில் பயன்படுத்தி அதன் தொழிற்பாடுகளை பல்வகைப்படுத்தப்பட்ட வணிகங்களுக்கு வழங்குதல்), எஸ்.எல்.டி கம்பஸ் பிரைவேட் லிமிடெட் (ததொதொ மற்றும் வணிகமுகாமைத்துவத்துறைகளில் தரமான, உயர்தர, வாங்கும்திறனுள்ள கல்வி வாய்ப்புகளை உருவாக்குகிறது).

Scroll To Top